Breaking News

தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4.83 லட்சம் நலத்திட்ட உதவிகள் – வாரியத் தலைவர் தலைமையில் ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (14.07.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் சார்பில், வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் சுமார் 250 தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர். தற்காலிக பணியாளர்கள் தங்களது பணி விவரங்களை மற்றும் சந்திக்கின்ற பிரச்சனைகளை நேரடியாக வாரியத் தலைவரிடம் தெரிவித்தனர். அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவற்றுக்கு தீர்வு காணப்படும் என அவர் உறுதியளித்தார்.


அதன்பின் தாட்கோ கிளீன்லினஸ் வொர்க்கர்ஸ் அட்வான்ஸ்மென்ட் சொசைட்டி ஆஃப் பச்சையம்மன், வாலாஜாபாத் மூலம் கீழ்க்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன:

  • சிறு வணிக கடன் தொகை: 9 நபர்களுக்கு தலா ₹50,000 வீதம் – மொத்தம் ₹4.50 லட்சம்
  • கல்விக்கடன் உதவி: 4 நபர்களுக்கு மொத்தம் ₹5,500
  • திருமண உதவி: 1 நபருக்கு ₹3,000
  • இயற்கை மரணம் உதவி: 1 நபருக்கு ₹25,000
  • அடையாள அட்டை: 1 நபருக்கு வழங்கப்பட்டது

மொத்தம் 15 பயனாளிகளுக்கு ₹4,83,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு சி.வி.எம்.பி. எழிலரசன், வாரிய உறுப்பினர்கள் திரு. அரீஷ், திரு. ராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் திருமதி க. ஆர்த்தி, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு. வே. நவேந்திரன், குன்றத்தூர் ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சரஸ்வதி மனோகரன், தாட்கோ மாவட்ட மேலாளர் முனைவர் வே. ராஜசுதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி எல். தனலெட்சுமி ஆகியோர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments